Watch Superhit Movie Ullagam Sutrum Valiban Online Starring M.G.Ramachandiran , Nagesh , Latha , Manjula , Chandrakala , Ashokan , R.S.Manohar and Others. Produced and Directed by M.G.Ramachandiran , Music by M.S.Viswanathan . Watch Movie :
Watch Song : Song Lyrics : அன்பே வா அன்பே வா வா வா வா உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா அன்பே வா அன்பே வா வா வா வா நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும் நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும் பாதையிலே வெளிச்சமில்லை பகல் இரவு புரியவில்லை பார்வையும் தெரியவில்லை ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை (உள்ளம் என்றொரு) வான்பறவை தன் சிறகினை எனக்குத்தந்தால் பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால் வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்துவந்தே காதலை வாழவைப்பேன் அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன் (உள்ளம் என்றொரு)
Watch Song : Song Lyrics : அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே போகும்போது வேறுபாதை போகவில்லையே கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்