Watch Paramasivan Kazhuthil Irunthu Song with Lyrics from Movie Suriyakanthi (1973)

Watch Song :

Song Lyrics :

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா  சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே
அதில் அர்த்தம் உள்ளது

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலை வாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது
அது அவ்வை சொன்னது அதில்  அர்த்தம உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா  சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே
அதில் அர்த்தம் உள்ளது

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்
உன்னை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தம உள்ளது

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போல் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போல் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததால
என் உள்ளம என்னை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா  சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே
அதில் அர்த்தம் உள்ளது

Comments

Popular posts from this blog

Watch Pillai Nila Song With Lyrics from Movie Neengal Kettavai (1984)

Mullum Malarum (1978)