Watch Malai Pozhuthin Mayagathilae Song With Lyrics from Bagyalakshmi Movie
Watch Song :
Lyrics :
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
Lyrics :
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மாலை பொழுதின மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
இன்பம் சிலநாள் துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி
காண்பது ஏன் தோழி ஆ ஆ ஆ
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலை இட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி,பறந்து விட்டார் தோழி ஆ ஆ ஆ
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
கனவில் வந்தவர் யாரென கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆ ஆ ஆ
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ
மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
Comments
Post a Comment