Watch Parthean Sirithen Pakkam Vara Azhaithen song with Lyrics from Old Tamil Movie Veera Abhimanyu

Watch Song :





Lyrics :

ஆ : பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்

பெ : பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இவரென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இவரென மலைத்தேன்

ஆ : கொடித்தேன் இனியெங்கள் குடித்தேன்
என ஒரு படி தேன் பார்வையில் குடித்தேன்
கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன்
என ஒரு படி தேன் பார்வையில் குடித்தேன்
துளித்தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு துளித்தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன் அழகினை ரசித்தேன்

பெ : பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இவரென மலைத்தேன்

பெ : மலர்த்தேன் போல் நானும் மலர்த்தேன்
உனக்கென வளர்த்தேன் பருவத்தில் மணந்தேன்
மலர்த்தேன் போல் நானும் மலர்த்தேன்
உனக்கென வளர்த்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவை தேன்
இனிதேன் இல்லாதபடி கதை முடித்தேன்

ஆ : பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்

Comments

Popular posts from this blog

Watch Pillai Nila Song With Lyrics from Movie Neengal Kettavai (1984)

Mullum Malarum (1978)